Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார் அதிஷி!

Advertisements

டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

டெல்லி துணை நிலை கவர்னர் இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அரவிந்த கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, பாஜக மாநில தலைவர், டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அதிஷியுடன் 5 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாகப் பதவியேற்கின்றனர். முதல்-மந்திரி அதிஷி தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 மந்திரிகளான கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், இம்ரான் ஹூசைன், முகேஷ், கைலாஷ் கெலாட் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் முதல்-மந்திரியாக பதவியேற்ற மூன்றாவது பெண் அதிஷி ஆவார். மேலும், டெல்லியின் இளம் வயது முதல்-மந்திரி என்ற பெருமையையும் அதிஷி பெறுகிறார்.

பதவியேற்புக்கு பிறகு 26 மற்றும் 27-ந் தேதிகளில் சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெறும். அதில் தனது ஆட்சி பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். 70 பேர் கொண்ட டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *