Advertisements

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!
நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக இன்று (நவம்பர் 10) காலமானார்.
நடிகர் டெல்லி கணேஷின் உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisements

