
புதுச்சேரியில், நாளுக்கு நாள் இணைய வழி மோசடியில் பொதுமக்கள் சிக்கி பணத்தை இழப்பது அதிகமாகிக் கொண்டே இருப்பதால் ரோட்டரி கிளப் பிரெஞ்சு சிட்டி சார்பில், விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள நேரு வீதி பட்டாணிக் கடை சந்திப்பில், நாளுக்கு நாள் இணைய வழி மோசடியில் பொதுமக்கள் சிக்கி பணத்தை இழப்பது அதிகமாகிக் கொண்டே இருப்பதால் ரோட்டரி கிளப் பிரெஞ்சு சிட்டி சார்பில், விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இணைய வழி காவல்துறை ஆய்வாளர்கள் கீர்த்தி, தியாகராஜன் ஆகியோர் ரோட்டரி கிளப் பிரஞ்சு சிட்டியுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதையடுத்து, ரோட்டரி கிளப் ஆப் பிரெஞ்சு சிட்டி தலைவர் பரிமளம், செயலாளர் கண்ணன், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



