
மும்பை வான்கடே மைதானத்தில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது.
2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவிற்காக வென்றுகொடுத்த ரோகித் சர்மாவிற்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டேண்ட் திறக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, அஜித் வடேகர் மற்றும் போற்றக்கூடிய நிர்வாகியாக செயல்பட்ட ஷரத் பவார் பெயர்களில் 3 ஸ்டாண்டுகளைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாகாராஷ்டிரா மாநில முதலமைச்சர், தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு அதிகார பூர்வ பெயர் பலகையை திறந்து வைத்தார். மே 13ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்று பிரமாண்டமாக நடத்தப்பட்டது.



