Congress Jayakumar death case:சபாநாயகர் அப்பாவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை!

Advertisements

நெல்லை:நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கைச் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாகப் பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

ஆனாலும் இதுவரை பெரிதாகத் துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது.

இந்நிலையில் நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாகத் திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப், சபாநாயகர் அப்பாவு-வுக்கு நெருக்கமானவராக வலம் வருவபர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜோசப் பெல்சியோடு, ஜெயக்குமாரின் ஓட்டுநர் உட்பட 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *