
கம்போடியாவுடன் எல்லையில் சண்டை நடைபெற்று வரும் நிலையில் தாய்லாந்து, கடலோரப் பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தியுள்ளது.
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே எல்லைத் தகராறு நீடித்து வருகிறது. இதனால் எல்லையில் உள்ள இருநாட்டுப் படையினரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் இருந்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், தாய்லாந்து தென்கிழக்கில் உள்ள டிராட் மாகாணத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் நீடிக்கும் தகராறு டிராட் மாகாணத்துக்கும் பரவி விடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் ஏற்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள போதும் அதை ஏற்காமல் இருநாடுகளும் எல்லைப் பகுதியில் சண்டையிட்டு வருவது குறிப்பிடத் தக்கது.



