நட்சத்திர ஓட்டல்களில் விற்கும் சுத்தமான காற்று!

Advertisements

டெல்லியில் கடந்த சில நாட்களாகக் காற்றின் தரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குக் கடந்த சில நாட்களாகக் காற்று தரக்குறியீடு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்த நிலையில், பள்ளிகளில் வகுப்புகள் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டதோடு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்களில் சுத்தமான காற்று சேவையாக விற்கப்படுவதாகச் சமூக வலைதளத்தில் பரவும் தகவல் பேசுபொருளாகி இருக்கிறது.

இதுதொடர்பாக அமெரிக்காவில் முதலீட்டாளராகப் பணிபுரியும் இந்திய என்ஜினீயரான டெபர்கியா தாஸ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், அவர் டெல்லி தாஜ் ஓட்டலில் உள்ள ஒரு அறிவிப்பைக் காட்டுகிறார். அதில், அவரது விருந்தினர் அறையில் காற்று தரக்குறியீடு 58 ஆக இருந்தது. இது கடந்த சில நாட்களுக்கு முன்பு 397 வரை இருந்தது. இந்நிலையில் அவரது இந்தப் பதிவு வைரலான நிலையில் டெல்லியில் சுத்தமான காற்று ஒரு பிரீமியம் சலுகையாக மாறியுள்ளது எனவும், அது வாங்கக்கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் பயனர்கள் பதிவிடுகின்றனர். இதனால் அவரது பதிவு இணையத்தில் விவாதமாக மாறியுள்ளது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *