
விருத்தாசலத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. இறுதியில் இந்தத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியஅனைத்து துறை அதிகாரிகளுக்கும் சான்றுகள் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளை ஒன்றிணைத்து மக்களிடம் முதல்வர் முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்களிடமிருந்து வாங்கப்படும் மனுக்கள்மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விருத்தாசலத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சிதம்பரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாமினை நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர் ராதா கிருஷ்ணன். உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று முகாமை துவக்கி வைத்தனர் உடன் நகராட்சி ஆணையர் பானுமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மருத்துவத் துறை சார்பில் மருத்துவ முகாம் காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, எரிசக்திதுறை, மாற்று திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அரசு ஊழியர்கள் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மக்களிடம் முதல்வர் முகாம் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய, பொதுமக்களிடமே கோரிக்கைகளை அவர்களில் இருப்பிடடத்திலேயே நிவர்த்தி செய்துசிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மக்களின் முதல்வர் சான்றிதழை, மக்களிடம் முதல்வர் முகாமில் பணியாற்றிய வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி துறை, மின்துறை, வீட்டு வசதி மற்றும் நகரபுரம் மேம்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறுத்துறையில் உள்ள அனைவருக்கும் நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ். நகராட்சி ஆணையர் பானுமதி ஆகியோர்கள் சான்றுகளை வழங்கினார்கள் உடன் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் செல்வம் நகராட்சி துப்புர அலுவலர் பூபதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


