chennai:பல பெண்களுடன் தொடர்பு… தட்டிக் கேட்ட காதலிக்கு சரமாரி அடி!

Advertisements

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 45 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை:சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சிக்காக சேர்ந்தார். அப்போது அந்த உடற்பயிற்சி மையத்தில் நாகராஜ் (வயது 33) என்ற உடற்பயிற்சியாளருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் நாகராஜ், இளம்பெண்ணிடம் இருந்து 45 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் பணம் மற்றும் விலையுயர்ந்த இரு சக்கரவாகனம் வாங்கி உள்ளார். தொடர்ந்து நாகராஜின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெண் அவரை பின் தொடர்ந்து கண்காணித்து இருக்கிறார். அதில் நாகராஜ் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.

இது குறித்து நாகராஜிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த நாகராஜ் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதையடுத்து இளம்பெண், நாகராஜ் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *