Chandramukhi 2: ட்ரெண்டாகும் வடிவேலு வீடியோ!

Chandramukhi 2 | Vadivelu

பெஸ்ட் பிரண்டு நான்தான்- ட்ரெண்டாகும் Chandramukhi 2 வடிவேலு வீடியோ…

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம்கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகிக் கவனம் பெற்றுள்ள நிலையில், ‘சந்திரமுகி -2’ படத்தில் வடிவேலுவின் டப்பிங் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தில், சந்திரமுகி பத்து பாகம் வந்தாலும் சந்திரமுகியின் பெஸ்ட் பிரண்டு நான்தான் என்று வடிவேலு கூறும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெளியீட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *