
41 அதிகாரிகள் வெளியேற்றம்!
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, இந்தியாவில் உள்ள 41 கனடா அதிகாரிகளை அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டது. இதனையடுத்து கனடா, இந்தியாவில் இருந்த அந்நாட்டு அதிகாரிகளைத் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதையடுத்து 62 உயர்மட்டத்தில் பணி புரிந்து வந்த அதிகாரிகளை வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
மேலும் அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறோம். எனவே அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்தார். இந்தியா தரப்பில், இந்தியாவின் உள் விவகாரங்களில் கனடா தலையிடுவதோடு, ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல்களிலும் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது.


