
இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அது கவலையளிப்பதாகவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா எதிர் வினையாற்றியுள்ளது. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வெளியான அறிவிப்பைக் குறித்து கவலையளிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதை உன்னி
சிஏஏ சட்டம்குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா:
இந்தியாவில் “குடியுரிமை திருத்தச் சட்டம் மார்ச் 11 அன்று அமல்படுத்தியதைக் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஒரு கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரம் மற்றும் சட்டத்தின் கீழ் அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்துவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்றார்.
சிஏஏ சட்டம்குறித்து ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை:
இந்தியாவில் சிஏஏ செயல்படுத்தப்படுவதை ஐக்கிய நாடுகள் சபையும் விமர்சித்துள்ளது அதேபோல இந்தச் சட்டம்குறித்து சிவில் உரிமைக் குழுக்களும் கவலை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


