Advertisements

டெல்லி :
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. புதிய எம்.பி.க்கள் 2 நாட்களாக பதவியேற்றுக்கொண்டனர். இரு அவைகளும் அடங்கிய கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். இதைதொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்கிறார். நாளை அவர் நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த பிப்ரவரி 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்தார். அதன்படி முழுமையான பட்ஜெட்டை நாளை அவர் தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் கூட்டத்தொடர், ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய அரசு 6 மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
Advertisements


