
பொன்னேரியில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு. இருச்சக்கர வாகனத்தில் வந்து லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அங்கமுத்து தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 3-ஆம் தேதி தமது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த திருட்டின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3-ஆம் தேதி அதிகாலை ராஜசேகரன் வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறிது தூரம் சென்று ஒருவர் மட்டும் வந்து லாவகமாக வாகனத்தை திருடி செல்கிறார். இந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.

