
பாஜ.க ஆட்சி இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்கும்!
ஜோத்பூர்: ”எங்கெல்லாம் பாஜ.க, ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் வளர்ச்சி இருக்கும்” எனப் பாஜ.க, தேசிய தலைவர் நட்டா பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: ராஜஸ்தானில் பாஜ.க, ஆட்சி அமைத்தால் காஸ் சிலிண்டருக்கு ரூ.450 மானியம் வழங்கப்படும். புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். 12ம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும்.
எங்கெல்லாம் காங்கிரஸ் இருக்கிறதோ அங்கெல்லாம் ஊழல், கொள்ளை, வாரிசு அரசியல் இருக்கும். அதேநேரத்தில் எங்கெல்லாம் பாஜ.க, ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் வளர்ச்சி இருக்கும்.
இன்று பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்கள் பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. ஊழல் செய்தவர்கள்மீது விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்போம்.குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
பிரதமர் மோடியின் தலைமையில் பாஜ.க, ஆட்சியில், பிரிட்டனை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியது. 9 ஆண்டுகளுக்கு முன் கார்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இன்று அனைத்து கார்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு நட்டா பேசினார்.



