
ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் நான்கு சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 17ஆவது ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், சூப்பர் நான்கு சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
அதிகப்பட்சமாக பர்கான் 58 ரன்களும் சயீம் அயூப், முகமது நவாஸ் ஆகியோர் ஆளுக்கு 21 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி 19 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அபிசேக் ஷர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும், திலக் வர்மா 30 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.



