Archery World Cup2024: 5-வது முறையாக வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை!

Advertisements

உலகக்கோப்பை வில்வித்தை தொடரின் இறுதிப்போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது.

ட்லாக்ஸ்காலா:2024-ம் ஆண்டிற்கான வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டி, மெக்சிகோவின் ட்லாக்ஸ்காலாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டிக்கு சீன வீராங்கனை லி ஜியாமனும், இந்திய வீராங்கனை தீபிகா குமாரியும் முன்னேறினர். இதில் லி ஜியாமனிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார் தீபிகா குமாரி.

வில்வித்தை உலகக்கோப்பையில், தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வெல்வது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *