Andhra:கத்தி முனையில் மாமியார், மருமகள் பலாத்காரம்- 4 பேர் வெறிச்செயல்!

Advertisements

திருப்பதி:கர்நாடக மாநிலம், பெல்லாரியை சேர்ந்த தந்தையும், மகனும் ஆந்திரா மாநிலம், சத்ய சாய் மாவட்டம், சில மத்தூரில் உள்ள ஒரு காகித ஆலையில் காவலாளியாக வேலை செய்து வந்தனர்.

தசரா பண்டிகை முன்னிட்டு காகித தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு தந்தையும், மகனும் தங்களது மனைவிகளுடன் காகித தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

அதிகாலை 3 மணிக்கு 2 பைக்குகளில் 4 மர்ம நபர்கள் வந்தனர். அதிகாலை நேரம் என்பதால் 4 பேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

அவர்களது அறைக்கு வந்த மர்ம நபர்கள் கத்தியை எடுத்து தந்தையையும், மகனையும் ஈவு இரக்கம் இன்றி சரமாரியாக வெட்டினர். இதில் தந்தையும், மகனும் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் கத்தி முனையில் மிரட்டி 4 பேரும் சேர்ந்து மாமியார், மருமகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அவர்கள் தாங்கள் வந்த பைக்கில் தப்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இது குறித்து சில மத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ரத்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரத்னாவை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் பிரபல நடிகரும், இந்துப்புரம் எம்.எல், ஏ.வுமான நந்தமுரி பாலகிருஷ்ணா குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கொடுமையான தண்டனை வழங்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொண்டார்.

தசரா பண்டிகை நடந்து வரும் நிலையில் மாமியார், மருமகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *