
பிரதமரைப் போல செயல்படும் அமித்ஷா என மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் உத்தரவின் அடிப்படையில், செயல்பட வேண்டுமா அல்லது பொதுமக்களின் உரிமைகளின் நலனுக்காக செயல்பட வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், அமித்ஷா நாட்டின் செயல் பிரதமரைப் போல நடந்து கொள்கிறார் என கூறினார். இதனை, பிரதமர் மோடி எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், அமித்ஷாவை எப்போதும் நம்ப வேண்டாம் என பிரதமரை தாழ்மையுடன் கேட்டு கொண்டார். மேலும் அவர், எனது வாழ்க்கையில் பல அரசாங்கங்களை பார்த்திருக்கிறேன்.
ஆனால், இதுபோன்ற ஒரு திமிர்பிடித்த, சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் பார்த்ததில்லை என தெரிவித்தார்.
