
மீண்டும் அணு ஆயுத சோதனைகளைத் தொடங்குவதற்குத் தனது அதிகாரிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 30 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துமாறு தனது பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.
இது, குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புதின் நிறுத்திவைக்கப்பட்ட அணு ஆயுத சோதனைகளை மறுபடியும் நடத்தும் எண்ணம் ரஷியாவுக்கு இல்லை.
ஆனால், அமெரிக்கா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டால், ரஷ்யாவும் அந்த நடவடிக்கையில் இறங்கும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவர், அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துவதற்கு, அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


