ADMK:இவை மூன்றுதான் திமுகவை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது..இ.பி.எஸ்.கடும் விமர்சனம்!

Advertisements

எடப்பாடி:சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

* கூட்டணி பலம் இல்லை, பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை என்றாலும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது.

* கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட இந்தாண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு சதவீத கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது.

* அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்துள்ளதாக முதலமைச்சர் எந்த அடிப்படையில் பேசினார்.

* பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கி 7 சதவீதம் குறைந்துள்ளது.

* தமிழ்நாட்டில் அதிமுகவின் செல்வாக்கு குறையவில்லை, திமுகவின் செல்வாக்கு தான் குறைந்துள்ளது.

* கூட்டணியை நம்பித்தான் திமுக அரசு உள்ளது. ஆனால் அதிமுக யாரை நம்பியும் இல்லை.

* ஊடகமும், பத்திரிகையும், கூட்டணியும் தான் திமுகவை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

* கூட்டணியை நம்பி மட்டும் திமுக தேர்தலைச் சந்திக்கின்றது. தாங்கள் செய்த சாதனைகளை நம்பி திமுக தேர்தலில் நிற்கவில்லை.

* கூட்டணி பலத்தால் தான் வெற்றி பெற்றதாக முதலமைச்சரே பேசி உள்ளார்.

* கூட்டணி கட்சி தலைவர்களே தி.மு.க. அரசை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.

* கூட்டணியினரே விமர்ச்சிக்கிறார்கள் என்றால் அந்தக் கூட்டணியில் விரிசல் என்று தானே அர்த்தம்.

* 41 மாத திமுக ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

* திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது.

* இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

* திமுக என்பது கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்ப உறுப்பினர்கள் தான் திமுகவில் ஆட்சி அதிகாரத்திற்குள் வர முடியும்.

* திமுகவில் மன்னராட்சியை போன்று இளவரசர்களுக்கு முடி சூட்டப்படும்.

* அதிமுக இருக்கும்வரை உதயநிதிக்கு முடிசூட்ட வேண்டும் என்ற கனவு பலிக்காது.

* ஸ்டாலினுடன் மிசாவில் கைதானவர்களுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை? குடும்ப உறுப்பினர் என்பதால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி.

* அடிப்படை கட்டமைப்பு கொண்ட கட்சி என்றால் அ.தி.மு.க. தான்

* 2021 சட்டமன்ற தேர்தலைவிடக் கூடுதலாக வாக்குகளைப் பெற உழைக்க வேண்டும்.

* ஜோசியம் பலிக்கும், 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றார்.

இதனிடையே, எடப்பாடிக்கு ஆளுமை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, ஆளுமை இருந்ததால் தான் 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *