
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லை .இது தொடர்பாக அவர் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்து விட்டன.இப்போது தமிழ்நாட்டில் ஒரு கட்சி அழியபோவது உறுதி . தேவை என்றால் யார் காலிலும் விழுவார்கள் , தேவை இல்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் இது தான் பாஜகவின் நிலைப்பாடு என்றார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக், அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார். மேலும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பா.ஜ.க.வை வெறுக்கிறார்கள்.




