
புதுடில்லி: எப்போதும் பிஸியாக இருப்பதில் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 10வது இடத்தில் உள்ளது.
உலக அளவில் விமான சந்தையில், வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஏற்கனவே உள்ள விமான நிலையங்களில் கூடுதல் வசதிகளை மத்திய அரசு ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறது.
கோவிட் தொற்றுக்கு பிறகு அதிகமான மக்கள் விமானங்களில் பயணம் மேற்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2023ம் ஆண்டில், உலகளவில் 8.5 பில்லியன் பயணிகள் விமானங்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 72.2 மில்லியன் பயணிகள் வெளியூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையின் படி, எப்போதும் பிஸியாக இருப்பதில் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 10வது இடத்தில் உள்ளது.
பிஸியாக இருக்கும் டாப் 10 விமான நிலையங்கள்
* 1.அட்லான்டா சர்வதேச விமான நிலையம், அமெரிக்கா
* 2.துபாய் சர்வதேச விமான நிலையம், யு.ஏ.இ.,
* 3.டல்லாஸ் சர்வதேச விமான நிலையம், அமெரிக்கா
* 4.லண்டன் ஹீத்ரு விமான நிலையம், பிரிட்டன்
* 5.டோக்கியோ சர்வதேச விமான நிலையம், ஜப்பான்
* 6.டென்வர் விமான நிலையம், அமெரிக்கா
* 7.இஸ்தான்புல் விமான நிலையம், துருக்கி
* 8.லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம், அமெரிக்கா
* 9.சிகாகோ சர்வதேச விமான நிலையம், அமெரிக்கா
* 10. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்.

