
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை முதலமைச்சர் மம்தா பானர்ஜி பார்த்து ஆறுதல் கூறினார்.
மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைப் பார்வையிட மால்டா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ககன் முர்மு, சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கோஷ் ஆகியோர் சென்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியபோது அவர்கள் இருவர் மீதும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ககன் முர்மு சிலிக்குரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையறிந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டு அவருக்கு ஆறுதல் கூறினார்.
