Vijay Makkal Iyakkham Meeting: அரசியல் எண்ட்ரி.. நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்ட விஜய்!

Advertisements

நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து அரசியல் எண்ட்ரி குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.மேலும் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற உள்ளதாகவும் ஒரு மாதத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

குறிப்பாக இதில் அவர் நடிக்கும் இளம் வயது கதாபாத்திரத்தை டீ-ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாக்கி வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

வழக்கமாக நடிகர் விஜய், தான் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்ததுமே அடுத்த பட இயக்குனரை தேர்வு செய்துவிடுவார். ஆனால் கோட் படம் இறுதிக்கட்டத்தை எட்டியும், இன்னும் அவர் அடுத்த பட இயக்குனரை தேர்வு செய்யாமல் சைலண்டாகவே உள்ளார்.

மறுபுறம் கோட் தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்கிற பேச்சும் கோலிவுட்டில் பரவி வருகிறது. ஏனெனில் இப்படம் முடித்ததும் அவர் அரசியலில் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் தான் விஜய்யின் ஒவ்வொரு நகர்வுகளும் இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் மீட்டிங் ஒன்றை நடத்தி இருக்கிறார் தளபதி. அதில் விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அரசியல் நகர்வு பற்றி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற உள்ளதாகவும் ஒரு மாதத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும், மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கும்படியும், ஒருவேளை அதற்கு தடை ஏற்பட்டதால் தலைமைக்கு தெரிவிக்கவும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *