
அமெரிக்காவின் வரி உயர்வால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலை தளப்பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த ஐம்பது சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளி வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட மூவாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நமது தொழில்கள், தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரண, கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

