TVK Conference:விஜய்யின் தவெக மாநாடு நடப்பதில் சிக்கல்?தவெக கட்சியினர் கலக்கம்!

Advertisements

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சென்னை:தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 50 அடி அகலம், 200 அடி நீளத்திற்கு மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க 27 குழுக்களை கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அமைத்தார். குறிப்பாக சட்டம், போக்குவரத்தை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 234 தொகுதிகளுக்கும், தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடலில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வருகின்ற 27-ம் தேதிக்குள் மாநாட்டுக்கான பணிகளை முழுமையாக முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் மழையால் மாநாட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது தவெக கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *