Today rasipalan: இன்றைய ராசிபலன் – 23.09.2024

Advertisements

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 7-ந்தேதி திங்கட்கிழமை

திதி : இன்று இரவு 08.09 வரை சஷ்டி பின்பு சப்தமி

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.48 வரி கிருத்திகை பின்பு ரோகிணி

நல்லநேரம் காலை : 6.15 – 7.15

நல்லநேரம் மாலை : 4.45 – 5.45

ராகுகாலம் காலை : 7.30 – 9.00

எமகண்டம் காலை : 10.30 – 12.00

குளிகை மதியம் : 1.30 – 3.00

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி

இன்றைய பலன்கள்:

மேஷம்


துயரங்கள் விலகத் துணிந்து முடிவெடுக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

ரிஷபம்


தடைகள் தானாக விலகும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். கைமாத்தாகக் கொடுத்த பணம் கைக்கு வந்து கிடைக்கலாம். பல நாட்களாகச் செய்ய நினைத்த வேலையொன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்


கல்யாணக் கனவுகள் நனவாகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

கடகம்


நாளைய எண்ணங்கள் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரலாம். உத்தியோகத்தில் சம்பள உயர்வுபற்றிய தகவல் வரலாம்.

சிம்மம்


கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். பூர்வீக சொத்துகள் விற்பனையால் கணிசமான லாபம் உண்டு.

கன்னி


சொன்ன சொல்லைக் காப் பாற்றி மகிழும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் கொள்கைப் பிடிப்போடு செயல் படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு ஏற்படும்.

துலாம்


யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். உடல் நலம் பற்றிய கவலை உருவாகும்.

விருச்சிகம்


நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் வீட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். தொழில் வளர்ச்சி கூடும்.

தனுசு


மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும், சவால்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்


புகழ் கூடும் நாள். நீண்ட சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நன்மை உண்டு.

கும்பம்


குடும்பத்தில் குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகம் சம்பந்தமாகப் பிரபலமானவர்களை சந்திப்பீர்கள்.

மீனம்


நட்பால் நன்மை கிட்டும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *