Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 21.04.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு  அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். இதனால் மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்காது. அதனால் கொஞ்சம் கவனமாகச் செயல்பட வேண்டும். பணிகள் அதிகமாகக் காணப்படும்.அதைக் குறித்த நேரத்தில் முடிக்கச் சிரமப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அகந்தை போக்கைக் காண்பீர்கள். அதனால் அவரை அனுசரித்து செல்வது நல்லது. பண நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் சிறப்பானதாக மாற்றிக் கொள்ளலாம்.  பணிகளை அதிகமாகக் காணப்படும். அதனால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களின் மீது கோவத்தை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்து காணப்படும். எண்ணெய் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   உங்களின் திறமையின் காரணமாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணியிட சூழல் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்றப் பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் மனம் திறந்து பேசுவீர்கள். இதனால் இருவருக்கிடையே ஒற்றுமை பலப்படும்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு  கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகள் அதிகமாகக் காணப்படும் நாளாக இருக்கும். அதனால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பொறுமையாகப் பழகுவது நல்லது. பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

 

கன்னி

 

 

கன்னி ராசிக்காரர்களுக்கு  கவலை அளிக்கும் நாளாக இருக்கும். அதனால் பணிகளைக் கூட உங்களால் சரியாகச் செய்ய முடியாது. அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படும். தேவையில்லாத செலவுகள் காணப்படும். அதனால் கடன் வாங்காமல் சமாளிப்பது நல்லது. செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன் ஒன்றுக்கு மூன்று முறை யோசித்து செய்வது நல்லது. உங்கள் பணிகளில் அதிக கவனம் தேவை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தேவை இல்லாமல் விவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவுகள் காணப்படும். முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் கிடைக்கும் நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் பணிகளில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான வார்த்தைகளைப் பேசுவீர்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பணவரவு அதிகமாகக் காணப்படும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  சாதாரண நாளாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படாது. கவனக்குறைவு காரணமாகப் பணிகளில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில வாக்குவாதங்கள் காணப்படும் நாளாக இருக்கும். அதனால் அனுசரித்து செல்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் காணப்படும். பதட்டத்தை குறித்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்காது. உங்களிடம் தைரியம் குறைந்து காணப்படும்.  பணியிட சூழல் உங்களுக்குச் சாதகமாக இருக்காது. கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். பணிகள் அதிகமாகக் காணப்படும். அதைக் குறித்த நேரத்தில் முடிக்கத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். பணவரவு அதிகமாகக் காணப்படாது. கால் மற்றும் தொடை வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். பணியிடச் சூழல் இன்று உங்களுக்குச் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்பான முறையில் பழகுவீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *