Advertisements

---------- Forwarded message --------- From: Arul mozhi S.S<r.r.arulrhythms@gmail.com> Date: Tue, 12 Dec 2023, 14:57 Subject: To: <sharinggem@gmail.com> மேஷம்

மனசோர்வற்ற மேஷ ராசி காரர்களே இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய அறிவாற்றலை பார்த்து அனைவரும் வியப்பார்கள். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகள் குவியும். பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு தேவையான முயற்சிகளை நாளை மேற்கொள்ளலாம். சந்தோஷம் நிறைந்த எந்த நாளில் வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகளும் தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. மேலும் இன்று நீங்கள் தாத்தா திரையரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 2.
ரிஷபம்

எதையும் சமாளிக்க கூடிய ரிஷப ராசிக்காரர்களே இன்று சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். இதனால் வேலையில் கவனம் இருக்காது. சின்ன சின்ன தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. செய்யும் தவறினால் மனக்கவலை ஏற்படலாம். கொஞ்சம் உஷாராக இருந்துக்கோங்க. பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும். பெரியவர்களின் பேச்சை உதாசீனப்படுத்த கூடாது. நாவடக்கம் தேவை. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த நடப்பது குடும்ப ஒற்றுமைக்கு நல்லது. மேலும் இன்று விநாயகரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 1.
மிதுனம்

மகிழ்ச்சிகரமான மனம் நிறைந்த மிதுன ராசிக்காரர்களே இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னோக்கி செல்வதற்கு சில நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அது உங்களுக்கு நன்மை தருமா கெடுதல் தருமா என்பதை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். கண்மூடித்தனமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். தாய்மாமன் உறவால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாள் சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். தந்தை வழியில் ஆகாயம் உண்டு இன்று அனுமனை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 3.
கடகம்

எதையும் தாங்கும் இதயம் படைத்த கடக ராசிக்காரர்களே இன்றைய நாளில் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். எல்லா விஷயத்திலும் பொறுமை இருக்க வேண்டும். மூன்றாவது நபர் பேச்சை கேட்கக் கூடாது. உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் வெளிப்படுத்தக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு பின்னால் பிரச்சனையாகிவிடும். ஆகவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி இன்றைய நாளை கடந்து செல்வது நல்லது. பின்னால் உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை எடுத்து விட்டேன் என்று புலம்பியும் பிரயோஜனம் இருக்காது. கவனமாக இருப்பது நல்லது. இன்று காளிதேவியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.
சிம்மம்

அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே இன்றைய நாள் அலைச்சல்கள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு புதிய முயற்சிகளும் பல தடைகளை தாண்டி வெற்றியை கொடுக்கும். கூடுமானவரை முக்கியமான வேலையை நாளை தள்ளிப் போடவும். அன்றாட வேலைகளை கூடுதல் கவனத்தோடு இன்று செய்யுங்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். வாகனங்களில் செல்லும்போது உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். வெளியில் செல்லும் பொழுது கையில் அருகம்புல் எடுத்துச் செல்வது நல்லது. மேலும் இன்று நீங்கள் துர்க்கையை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 7.
கன்னி

இனிமையான எண்ணம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே இன்று உடல் சோர்வு இருக்கும். குளிர்ந்த உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்திலிருந்து, வேலை பளு சில பேருக்கு அதிகமாக இருக்கும். சில பேரால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கும். எதுவாக இருந்தாலும் பொறுமையாக சமாளிக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை இன்று நாட்டு மருந்தை உட்கொள்வது நன்மையை தரும். மேலும் இன்று நரசிம்மரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 9.
துலாம்

எதையும் சமாளிக்கும் துணிச்சல் கொண்ட துலா ராசிக்காரர்களே இன்று பல நன்மைகள் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கப் போகின்றது. நீங்கள் எதையும் செய்யவில்லை என்றாலும் நன்மை உங்களை தேடி வரும். உதாரணத்திற்கு அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூட உங்களுக்கு உதவ காத்திருப்பார்கள் வேலை செய்யும் இடத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். இன்று நீங்கள் திறமையாக செயல்பட வேண்டும். சில தந்திரமான புத்திசாலித்தனமான வேலைகளை செய்தால் தான் பிழைக்க முடியும். உடலை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். மேலும் இன்று நீங்கள் மகாலட்சுமியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 4.
விருச்சிகம்

அடாத மழையிலும் விடாது உழைக்கும் விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். அடிக்கிற மழையிலும் உங்களுடைய வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். யார் என்ன சொன்னாலும் சரி, என் வேலையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்று சவால் விடுவீர்கள். உங்களுடைய திறமையை பார்த்து சுற்றி இருப்பவர்கள் வியப்பார்கள். அரசாங்க சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். மேலும் இன்று நீங்கள் பெருமாளை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.
தனுசு

மனச்சோர்வற்ற தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் சுகமான நாளாக இருக்கப் போகின்றது. நல்ல சாப்பாடு கிடைக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். உறவினர்களின் ஆதரவு மன நிம்மதியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். உயர் கல்விக்கு தேவையான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. தாய்மாமன் வழிமுறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கீர்த்த யாத்திரை மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் என்று நீங்கள் பைராகியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 9.
மகரம்

உதவும் உள்ளம் கொண்ட மகர ராசி காரர்களே இன்றைய நாள் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கவனம் தேவை. கடன் வாங்காதீங்க. கடன் கொடுக்காதீங்க. தொழிலில் புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். வங்கி கணக்கில் ஏதாவது கடனை திருப்பித் தர வேண்டும் என்றால், அது சம்பந்தமாக பிரச்சனை இருந்தால் உடனடியாக பேசி தீர்த்துக் கொள்ளவும். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வெளியூர் பயணங்கள் வெற்றியை கொடுக்கும். ஆன்மீகம் மற்றும் தியானம் மனச்சோர்வை நீக்கும். மேலும் இன்று நீங்கள் ஹயக்ரீவரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 5.
கும்பம்

அடுத்தவர் மனநிலை புரிந்து பழகும் கும்ப ராசி காரர்களே இன்றைய நாள் மன நிறைவான சந்தோஷமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். வேலையில் கவனம் செலுத்துவீர்கள். சிக்கல் நிறைந்த வேலையை கூட சுலபமாக முடித்து விடுவீர்கள். உங்களுடைய வேலை மட்டுமல்ல அடுத்தவர்களுடைய வேலை சிரமங்களையும் புரிந்து கொண்டு உதவி செய்யக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மன நிறைவான இந்த நாளில் குடும்பத்துடன் மாலை நேரம் கோவிலுக்கு செல்வது மனதிருப்தியை அதிகரிக்கும். இன்று நீங்கள் வாராகி வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 3.
மீனம்

மன சஞ்சலம் அற்ற மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் தோன்றி மறையும் வெளியில் அலையும் வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் கொஞ்சம் சிரமம் இருக்கும். கவனம் தேவை. வெளி வேலையில் இருப்பவர்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. எவ்வளவு வேலை சுமை இருந்தாலும் உங்களுடைய பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். குலதெய்வத்தின் அருளினால் எதையும் சமாளிப்பீர்கள். இன்று பிரித்திங்கரா தேவி வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 1
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

