
தென் மாவட்டங்களில் 2023ல் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கை பேரிடர்களால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டது. இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,
வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தென் மாவட்டங்களில் 2023ல் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கை பேரிடர்களால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டது. இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2 லட்சம் விவசாயிகள் பயனடைய, 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் தயாரிக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.5 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சிறு, குறு விவசாயிகளுக்குக் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நுண்ணீர்ப் பாசனம், வேளாண் இயந்திரங்களுக்குக் கூடுதல் மானியம் வழங்கப்படும என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2022-23ஆம் ஆண்டில் 116 மெட்ரிக் டன்னாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர் வாழ்க்கையை மேலும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும். உழவர் பெருமக்களின் நலனுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளது. உழவர்கள் வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.


