
தமிழகத்தில் தற்போது சென்னை- பெங்களூரு, சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்க இயக்க வேண்டும் கோரிக்கை எழுந்தது…
சென்னை: சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வரும் 24ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் எனத் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் தெரிவித்தார். ரயில் சேவையைப் பிரதமர் மோடி காணொளி வாயிலாகத் திறந்து வைக்கிறாரெனக் கூறப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாக வில்லை.
தமிழகத்தில் தற்போது சென்னை- பெங்களூரு, சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்க இயக்க வேண்டும் கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வரும் 24ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் எனத் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் தெரிவித்தார்.
ரயில் சேவையைப் பிரதமர் மோடி காணொளி வாயிலாகத் திறந்து வைக்கிறாரெனக் கூறப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் பயண நேரம் குறையும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



