
திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரையில் நடைபெற்ற இந்திய கடற்படை வார விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கேரள முதலமைச்சர் பினறாயி விஐயன் ஆகியோர் பங்கேற்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கடற்படை நாள் விழா நடைபெற்றது. தில்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்கிருந்து கார் மூலம் சங்குமுகம் கடற்கரைக்கு வந்தடைந்தார்.
இதையடுத்துக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், முதலமைச்சர் பினறாயி விஜயன், மத்திய இணையமைச்சர் சுரேஷ்கோபி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதனை முன்னிட்டு, சங்குமுகக் கடற்கரையில் திரளான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.



