
தென்காசி மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெயில்- வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபடக் காவலர்களுக்கு நீர் மோர் மற்றும் லெமன் ஜூஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தின் காரணமாகக் கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையில், வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கொளுத்தும் வெயிலில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் தங்களது கடமைகளைச் செய்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தின் காரணமாகக் காவலர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், சாலைகளில் வெப்ப அலையானது கடுமையாக வீசி வருகிறது.
இந்த நிலையில், கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது கொழுத்தும் வெயிலில் தங்களது கடமைகளைச் செய்து போக்குவரத்தை சீர் செய்து வரும் காவலர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை நீர் மோர் மற்றும் லெமன் ஜூஸ் உள்ளிட்டவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் இன்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்களுக்கு நீர் மோர் வழங்கி இந்தப் பணியைத் தொடங்கி வைத்த நிலையில், வெயில் காலம் முடிவடையும் வரை நாள்தோறும் இரண்டு வேலைகள் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவலர்களுக்கு நீர் மோர் மற்றும் லெமன் ஜூஸ் வழங்கத் தென்காசி மாவட்டம் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



