
தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அதற்கு ரஜினிகாந்த் முதன்முறையாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கும் – நடிகர் விஜய்க்கும் இடையே கடந்த ஓராண்டாகவே பணிப்போர் நிலவி வந்தது. இதற்கு காரணம் ரசிகர்கள் தான். விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பரவலாக பேசப்பட்டதால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் விஜய்யை கடுமையாக தாக்கி பதிவிட்டனர். இதற்கு வலுசேர்க்கும் விதமாக ஜெயிலர் பட விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா – கழுகு கதை அமைந்தது. ரஜினி விஜய்யை தாக்கும் விதமாக தான் அந்த கதையை சொன்னதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், கட்சி தொடங்கிய விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கியது குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், ‘நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்’ என்றார்.

