திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு !

Advertisements
திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் எட்டு ஆண்டுகளில் 11 தேர்தல்களைச் சந்தித்து வெற்றிக் கண்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளதாகத் திமுக தலைமை தெரிவித்துள்ளது.
மேலும் எட்டு ஆண்டுகளில் 11 தேர்தல்களைச் சந்தித்து வெற்றி கண்டவர். தொடர்ந்து, 1966 ஆண்டில் கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பாளராகச் கட்சி பணியைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின் 2017 ஆண்டில் செயல் தலைவரானார். பின்னர் 2018 ஆண்டில் திமுக தலைவராக உயர்ந்த மு.க.ஸ்டாலின், 2021 ஆண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் என்று திமுகவினர் தெரிவித்தனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *