தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்..!

Advertisements

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை கேப்டனாக சுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடல்தகுதியை பொறுத்து போட்டிகளில் விளையாடுவது முடிவு செய்யப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *