பிரதமர் மோடியுடன் சித்தராமையா சந்திப்பு!

Advertisements

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் கர்நாடக காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையாவும், துணை முதல் மந்திரி சிவகுமாரும் சந்தித்துப் பேசினர்.

அப்போது பிரதமர் மோடியிடம், கர்நாடகா போன்ற மாநிலத்தில் நீர்ப்பாசன திறனைப் பலப்படுத்துவது அவசியம். பெரும்பாலான மாநிலங்கள் தங்களிடம் உள்ள நீர்வளத்தைப் பயன்படுத்தி, நீர்ப்பாசன வசதியைச் செய்து கொள்கின்றன.

மத்திய ஜல்சக்தி அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை எங்களின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கத் தாமதம் காட்டுகின்றன.

குறிப்பாக, மேகதாது திட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இத்திட்டத்துக்கு விரைவில் அனுமதி அளிக்கும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும். மஹதாயி, பத்ரா மேலணை போன்ற நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் எனச் சித்தராமையா வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *