Sexual Harassment: 2ஆம் வகுப்பு மாணவனிடம் பாலியல் சீண்டல்.. பள்ளி தாளாளர் மீது வழக்குப் பதிவு!

உத்திரமேரூர் அருகே இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் மீது  போக்சோ சட்டம் உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் பெருநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாமதி கண்டிகை பகுதியில் செயல்பட்டு வருகிறது ஜுப்ளி CBSE அகாடமி. இங்கு 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்குச் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியைச் சேர்ந்த ஃபாதர் சகாயராஜ் என்பவர் பள்ளி தாளாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரிடம் சகாயராஜ் தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர்களது பெற்றோர்கள் மாணவனின் செயலில் மாற்றம் கண்டு இதுகுறித்து கேட்டபோது, தாளாளர் சகாயராஜ் தன்னிடம் பாலியல் சீண்டல்கள் செய்து  துன்புறுத்தி வருகிறாரெனத் தெரிவித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் சைல்டு லைப் லைன் மூலம் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெருநகர் காவல் துறையினர் இது தொடர்பாகப் புகாரினை பெற்று அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போக்சோ வழக்கு உள்ளிட்ட 8 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தற்போது வரை பள்ளி தாளாளர் சகாயராஜ் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுவனிடம் சொல்ல முடியாத அளவுக்குப் பாலியல் சீண்டல் அளித்து அவனைத் துன்புறுத்தி வந்த தாளாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இத்தண்டனைகள் இனிவரும் காலங்களில் இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *