
இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்குக் கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு மூன்று கிலோமீட்டர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் நகர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்துக்கு மெதுவாகத் தென்மேற்குத் திசையில் கடற்கரை நோக்கி நகரும் என்றும், அதையடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.



