savukku shankar case:இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு!

Advertisements

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்கத் தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

சென்னை:பெண் போலீசாரை அவதூறாகப் பேசிய வழக்கில் ‘யூடியூப்பர்’ சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் , குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் நேற்று தாக்கல் செய்யச் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர். அதன்படி, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டது அசல் ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், இறுதி விசாரணை இன்று நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

அதன்படி , வழக்கின் இறுதிவிசாரணை இன்று நடைபெற்றது. இதில், இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமி நாதன் உத்தரவிட்டார். தமிழக அரசுப் பதில் மனு தாக்கல் செய்தபிறகு ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க நீதிபதி செந்தில்பாலாஜி உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின்மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்கத் தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

மேலும் சவுக்கு சங்கரை கோவை சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவிட்டுள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *