
புதுடில்லி: ‘காங்கிரஸ் எங்கு ஆட்சியில் இருந்தாலும், இந்தியாவின் பணத்தை இந்தியர்களுக்காகச் செலவிடும். முதலாளிகளுக்கு அல்ல என்பது எங்கள் வாக்குறுதி’ எனக் காங்., எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலுங்கானா விவசாய குடும்பங்களுக்கு வாழ்த்துகள். 40 லட்சத்துக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களைக் கடனிலிருந்து விடுவிக்கும் 2 லட்சம் ரூபாய் வரையிலான, அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து, காங்கிரஸ் அரசு ஒரு வரலாற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாயிகள்
எதைச் சொன்னாலும் அதைச் காங்கிரஸ் அரசு செய்து காட்டும். இதுவே என் எண்ணமும், என் பழக்கமும் ஆகும். காங்கிரஸ் அரசு என்பது விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
அதற்குத் தெலுங்கானா அரசின் இந்த முடிவு உதாரணம். காங்கிரஸ் எங்கு ஆட்சியில் இருந்தாலும், இந்தியாவின் பணத்தை இந்தியர்களுக்காகச் செலவிடும். முதலாளிகளுக்கு அல்ல என்பது எங்கள் வாக்குறுதி. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

