
பிற பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றதால் பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு நிறைவேறியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த நாள் 2021 ஜூலை 29 என்று குறிப்பிட்டுள்ளார்.
அது சமூகநீதிக்கு நன்னாள் என்றும், மருத்துவப் படிப்பில் 20 ஆயிரத்து 88 இடங்கள் கிடைத்தால் பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு நிறைவேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், சுருண்டுவிடாமல், போராடிப் பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கான இடங்களை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமூகநீதிக்கான இந்த அரசியலையும் – போராட்டத்தையும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


