Advertisements

வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர்!
அமெரிக்க அதிபர் ஜோப்பைடன் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வாஷிங்டன் செல்ல உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவித்துள்ளது. தற்போது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இருவரின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது உயர் அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisements


