Prajwal Revanna:ஜூன் 6-ந்தேதி வரை போலீஸ் காவல்!

Advertisements

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகிக் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் துன்புறுத்திப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். கர்நாடகா மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்வேன் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு வந்து இறங்கியதும் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *