
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இதற்காக அவர் நாளை மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா திடலுக்கு செல்கிறார். அங்கு சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். இதற்கிடையே, கோவை வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி – எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பின் போது கூட்டணி விவகாரம் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.





