
இந்தியாவில் 1 ஜிபி வயர்லெஸ் டேட்டா, டீயின் விலையை விட மலிவாகி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் உற்பத்தி செய்ய இதுவே சிறந்த தருணம் என்று குறிப்பிட்டார்.
இந்தியா சமீபத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது என்றும் இதன் மூலம் உலகின் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் 1 ஜிபி வயர்லெஸ் டேட்டா டீயின் விலையை விட மலிவாகி உள்ளது என்றும் கூறினார்.
மின்னணு சாதன உற்பத்தியில், இந்திய நிறுவனங்கள் ஏன் நம்பகமான உலகளாவிய சப்ளையர்களாக மாற முடியாது என கேள்வி எழுப்பினார்.
மேலும், மொபைல் உற்பத்தியில், சிப்செட்டுகள், டிஸ்பிளேக்கள் மற்றும் சென்சார்கள் போன்ற உபகரணங்கள் நாட்டிற்குள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
