
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்! மோடி உணர்வுபூர்வமான உரை…
இன்று சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் , டில்லியில் கூடியது. மோடி தலைமையில் கூடிய இக் கூட்டத்தில் , உணர்ச்சி பொங்க சிறப்புரை ஆற்றிவரும் நிலையில் . அவர் பேசிய போது உணர்வு பூர்வமான நிகழ்வுகளுக்கு இந்த பாராளுமன்றம் சாட்சியாக உள்ளது, மேலும் நாடாளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி-20 மாநாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமைப் பொறுப்புக்கு சான்று என்றும் ,பெருமிதம் கொண்ட அவர் நாடாளுமன்ற தாக்குதலை தடுக்க உடலில் குண்டுகளோடு போராடியவர்களை வணங்குவதாக கூறினார்.
பயங்கரவாத தாக்குதலைத் தண்டி இந்த கட்டிடம் நிலைத்து நிற்கிறது. மேலும் நேரு, அம்பேத்கார் இவர்களின் பேச்சுக்களை மெச்சினார்.
நாடாளுமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மென்மேலும் வளரவும் , நிலைத்து நிற்கவும் வேண்டும் என்பதே தனது ஆசை என கூறினார்.
முதன் முதலில் பாராளுமன்றத்தினுள் நுழையும் போது தலை வணங்கிவிட்டு உள்ளே வந்ததாக தெரிவித்தார்.
பசுமைப்புரட்சியில் லால்பகதூர் சாஸ்திரி பெரும் பங்காற்றியுள்ளார் என்று கூறீய அவர் நேரு, மன்மோகன் சிங், வாஜ்பாய் போன்றோர் பெருமை சேர்த்துள்ளனர் . நாடாளுமன்ற தாக்குதலை ஒரு போதும் மறக்க மாட்டேன். 600 -க்கும் மேலான பெண்கள் எம்.பி.க்கள் பங்காற்றி வருகின்றனர். பன்முகத்த்ன்மையை பறை சாற்றும் பாராளுமன்றம் ஏன்று தெரிவித்தார்.
உணர்வுபூர்வ நிகழ்வுகளுக்கு பாராளுமன்றம் சாட்சியாக உள்ளது என்றார். வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. பழைய … கட்டிடத்துக்கு விடை கொடுப்பது உணர்வுபூர்வமாக இருக்கும்.

