‘சிறைக்கு செல்லத் தயாராக இருக்கிறோம்’- பா.ரஞ்சித் பேசியது என்ன?

Advertisements

2025ஆம் ஆண்டிற்கான வானம் கலைத் திருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் தொடங்கியது.இந்தக் கலைத்திருவிழாவில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பி.கே.ரோசி திரைப்படவிழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள திரையரங்கத்தில் நடைபெற்றது.இந்த திரைப்பட விழாவில் உலகளவில் விருதுகள் பெற்ற திரைப்படங்கள், தடை செய்யப்பட்ட ஒரு சில உலகத் திரைப்படங்கள் உட்பட பல முக்கியமான படைப்புகள் திரையிடப்படும்.அந்தவகையில் நேற்று சந்தோஷ் என்ற திரைப்படம் திரையிடப்பட இருந்தது. ஆனால் அந்தப் படத்தைத் திரையிட அனுமதி கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இதுதொடர்பாகப் பேசியிருக்கும் பா.ரஞ்சித், “இந்தத் திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என்று போலீஸ் தரப்பில் இருந்து நோட்டிஸ் ஒட்டிச்சென்றிருக்கிறார்கள்.படம் திரையிடக்கூடாது என்று பிரச்னை செய்திருக்கிறார்கள். பிரசாத் லேப்பின் உரிமத்தை நீக்கி விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள்.இதற்கு இவருடைய தயாரிப்பில் வெளிவந்த bleedybugger திரைப்படம் வெளியாவதில் நிறைய எதிர்ப்புகள். இந்நிலையில் மறுபடியும் எதிர்ப்பு நிலவியுள்ளது. அவர்கள் பிரச்னை செய்தாலும் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு சக்தி நம்மிடம் இருக்கிறது.கைது செய்தாலும் பரவாயில்லை. கொஞ்சநாள் சிறையில் இருப்போம்.

10 நாட்கள் சிறையில் இருந்தாலும் புத்தகம் படிக்கலாம். அதுவும் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். கைதாவதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று பேசியிருக்கிறார். இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை என்பது உள்ளிட்ட பிரச்னைகள் இத்திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இந்தியாவில் திரையிடத் தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *