
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்தர மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசியுள்ளார்.
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசியுள்ளார். இதில் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக, இன்று மதியம் பாதுகாப்பு துறை குறித்த பார்லி நிலைக்குழு கூட்டம், நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.



